நான் சிரிக்கும்
சிரிப்பெல்லாம்
புன்
சிரிப்புமில்லை
நடக்கும்
பாதைகளில் முட்களுண்டு
ரோஜா
விரிப்புமில்லை
நான் சிந்தும்
கண்ணீரின்
நிறமுணர்ந்து
கொள்ளுங்கள்
மனமுடைந்தா
மகிழ்வுடனா
தரமுணர்ந்து
கொள்ளுங்கள்
காதலிப்பதுதான்
கடினமென
நினைத்திருந்தேன்
வெறுப்பது
அதனினும்
கடினமென
இன்றுணர்ந்தேன்
நான் சிரிக்கும்
சிரிப்பெல்லாம்
புன்
சிரிப்புமில்லை
நடக்கும்
பாதைகளில் முட்களுண்டு
ரோஜா
விரிப்புமில்லை
முகங்களும் அதுவே
வாய்பேசும்
மொழிகளும் அதுவே
அகத்தில்தான் ஏதோ
மாற்றங்கள் மெதுவே
நேற்று போல்தான்
இன்றும்
பொழுது விடிந்தது
விடியும் போதே
என்கண்ணில்
கண்ணீர் வடிந்தது
என்ன நெஞ்சமடா
இது
நினைவுகளுடன்
வாழத் துடிக்கிறது
என்நிழலும்
எனைவிட்டகன்றும்
நேற்றைய
திரைப்படம் நடக்கிறது
நான் சிரிக்கும்
சிரிப்பெல்லாம்
புன்
சிரிப்புமில்லை
நடக்கும்
பாதைகளில் முட்களுண்டு
ரோஜா
விரிப்புமில்லை
No comments:
Post a Comment